Tamil News Channel

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தை சந்தித்து கலந்துரையாடல்!

img-1

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள் கடந்த ஒருசில வாரங்களுக்கு முன்பு வணிகர் கழகத்தை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

இதன் போது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு அரசியல் அமைப்பிலுள்ள 13 வது சீர்திருத்தினை அமுல்படுத்துவது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என வணிகர் கழகம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கிணங்க  நேற்றைய தினம்   யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினரை  தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த (JVP) பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களுடைய அமைப்பினைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி உட்பட 5 பேர் கொண்ட உயர் மட்டக்குழுவினர் வருகைதந்து யாழ் வணிகர் கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட சில புத்திஜீவிகளுடன் விரிவாக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக் கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ,ஜனாதிபதி சட்டத்தரணி உப்புல் குமார பெரும தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திர சேகரன், யாழ்ப்பாணம் வணிகர்சங்க தலைவர் இரட்ணவடிவேல்ஜெயசேகரம் ,அகில இலங்கை தமிழ் மகா சபையின் தலைவர்  கலாநிதி காசிலிங்கம் , விக்னேஸ்வரன் தந்தைசெல்வா அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் சந்திரகாசன் , இளங்கோ மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts