ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் வவுனியா நகரில் இன்றைய தினம் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும் வரை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்போம் என்ற தொனிப்பொருளில் குறித்த துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
இதன்போது தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின்ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.