2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ள 40 வேட்பாளர்களில் 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 03 ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை சீலரதன தேரரால் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை குறிப்பிடாமல் ஒரு ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு எதிராக இரண்டு ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், ஆட்சேபனைகளை பரிசீலித்த தேர்தல் ஆணைய உறுப்பினர்கள், தேர்தல் சட்ட விதிகளின்படி, ஆட்சேபனைகளை நிராகரிக்க ஏகமனதாக முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று வேட்புமனுக்களை கையளித்த 39 வேட்பாளர்களும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.