எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
தேர்தல் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 4 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் மொத்தம் 173 முறைப்பாடுகள் இதுவரை இலங்கை பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனடிப்படையில், அவை வன்முறைச் செயல்கள் தொடர்பான புகார்கள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான புகார்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரையில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 119 முறைப்பாடுகளும் வன்முறைச் செயல்கள் தொடர்பான 54 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதுடன் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.