எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்காளர் ஒருவருக்கு எவ்வளவு தொகை செலவிட முடியும் என்பது தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்படும் என பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.