December 17, 2025
தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!
Top Updates இலங்கை அரசியல் புதிய செய்திகள்

தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

Apr 24, 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, திரன் அலஸ், கஞ்சன விஜேசேகர ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதுடன்.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அதற்கு ஆதரவைப் பெற்றுக் கொள்ள அனைத்துத் தரப்பினரிடமும் எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுப்பதே சிறந்தது என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டலஸ் அழகப்பெரும குழுவினர் உள்ளிட்ட கட்சிகளை மீளக் கொண்டு வருவதற்கும் ஆதரவை பெறுவதற்கு பிரதமரின் தலையீடு அவசியம் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இறுதியில், அரசாங்கத்தின் பெரும்பாலான பணிகளை மேற்கொள்ள விரும்புவதால், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *