ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, தனது அமைச்சின் கீழ் இவ்வருடத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.
எனவே ஜூலை மாதத்திற்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்படாது.
அரசாங்கம் போதிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது.ஆனால் சில துறைகள் இன்னும் வேலை செய்யவில்லை என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.