Tamil News Channel

தேர்தல் விதிமுறைகளை மீறிய இருவர் கைது!

தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று இன்று (30) அதிகாலையில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது, ​​ஹோமாகம நகரின் மத்தியில் முச்சக்கரவண்டியில் வந்த இருவர் சுவரொட்டிகளை ஒட்டுவதைக் கண்டு அவர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, மாபொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts