யாழ் தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பௌர்ணமி  தினமான இன்று(10)   மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம்  மாலை ஆறு மணி வரை இடம்பெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டம்  விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெறுகிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள்   தமிழ்த்தேசிய மக்கள முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன். சமத்துவக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார். சட்டத்தரணி காண்டீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(கிளிநொச்சி நிருபர்-பரமசிவன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here