நடைபெற்றுவரும் இருபதுக்கிருபது உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற சுப்பர் 8 சுற்றின் எட்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 சகல விக்கட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19.2 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கட்டுக்களை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நைப் (Phil Salt) தெரிவாகியிருந்தார்.
இன்றிரவு நடைபெறவுள்ள போட்டியில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.