இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டி நேற்றைய தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றிருந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை பெற்றனர்.
அணி சார்பாக ஜோஸ் இங்லிஸ் 110 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்று கொடுத்தார்.
இந்திய அணிசார்பாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னொய் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர்.
209 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பாக அதிக பட்சமாக அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் 80 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்று கொடுத்தார்.
பந்து வீச்சில் டன்வீர் சங்கா 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்.
1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.
இத்தொடரின் அடுத்த போட்டி எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.