
ரணிலை சந்திக்கவுள்ள சர்வதேச நாணய நிதியம்…
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (01.08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளனர்.
இந்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்று (31.07) மாலை சந்தித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய கடன் தவணை தொடர்பிலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.