Tamil News Channel

தொடரைக் கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்..!

ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்களுக்கு இடையில் நடைபெற்ற T20 தொடரை ஆப்கானிச்தான் அணி கைப்பற்றியுள்ளது.

நேற்றைய தினம்(02) சார்ஜா கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் ஆப்கானிதான் அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து தொடரைக் கைப்பற்றியுள்ளது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி வழங்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் முஹம்மட் வசீம் (Muhammad Waseem) 27 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் நவீனுல் ஹக் (Naveen-Ul-Haq) 4 விக்கட்டுக்களையும், கைஸ் அஹ்மட் (Qais Ahmad) 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

127 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.3 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.

துடுப்பாட்டத்தில் ஹஷ்ரதுல்லாஹ் ஷஷாய் (Hazratullah Zazai) அதிகபட்சமாக 36 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

ஐக்கிய அரபு இராச்சிய அணி சார்பாக ஜுனைந் சித்தீக் (Junaid Siddique) 2 விக்கட்டுக்களை அதிகபட்சமாக கைப்பற்றினார்.

இந்த போட்டியின் ஆட்டநாயகான நவீனுல் ஹக் (Naveen-Ul-Haq) தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்த வெற்றியுடன் சேர்த்து 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts