இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
R.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 14.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களை இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் பிரைன் பென்னட் 29 ஓட்டங்களை சிம்பாப்வே அணி சார்பாக பெற்றனர்.
பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கட்டுக்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் மஹீஸ் தீக்ஷன ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 10.5 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
இலங்கை அணி சார்பாக பத்தும் நிசங்க அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
பந்து வீச்சில் சீன் வில்லியம்சன் 1 விக்கட்டையும் வீழ்த்தியிருந்தார்.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
போட்டியின் ஆட்டநாயகனாக வனிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தொடரின் நாயகனாக அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவாகியிருந்தார்.