இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறும் T20 தொடரின் 4 ஆவது போட்டி நேற்றைய தினம் பிரையன் லாரா மைதானதில் நடைபெற்றது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களை பெற்றது.
ஃபில் சால்ட் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 57 பந்துகளில் 119 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அகீல் ஹொசைன், அன்றே ரஸல் மற்றும் ஜாஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 1 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
268 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 15.3 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அதிக பட்சமாக அன்றெ ரஸல் 51 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த வெற்றியை தொடர்ந்து இந்த தொடரை 2-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி சமநிலைப்படுத்தியுள்ளது.
தொடரின் 5 ஆவதும் இறுதியுமான போட்டி நாளைய தினம் பிரையன் லாரா மைதானத்தில் நடைபெறவுள்ளது.