இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பாக டவ்ஹித் ஹிர்டொய் (Towhid Hirdoy) ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களையும், சௌமியா சர்கார் (Soumya Sarkar) 68 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க (Wanindu Hasaranga) 4 விக்கட்டுக்களையும், டில்ஸான் மதுசங்க (Dilshan Madhushanka) 2 விக்கட்டுக்களையும் இலங்கை சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 47.1 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியடைந்தது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பதும் நிசங்க (Pathum Nissanka) 114 ஓட்டங்களையும், சரித் அசலங்க 91 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.
பங்களாதேஷ் அணிக்கு ஸொரிஃபுல் இஸ்லாம் (Shoriful Islam) மற்றும் தஸ்கின் அஹ்மட் (Takin Ahmed) ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை வீரர் பதும் நிசங்க (Pathum Nissanka) தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி இத்தொடரை 1-1 கணக்கில் சமநிலை செய்துள்ளது.
இத்தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் திங்கட் கிழமை நடைபெறவுள்ளது.