இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.
ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மானுல்லாஹ் குர்பாஷ் 70 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் அகில தனஞ்சய மற்றும் மதீஷ பதிரன ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை இலங்கை சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 65 ஓட்டங்களையும் பதும் நிசங்க 60 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு மொஹம்மட் நபி 2 விக்கட்டுக்களையும், ஙைஸ் அஹமட், ஃபரீட் அஹமட் மற்றும் நூர் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கட்டையும் பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லாஹ் குர்பாஷ் தெரிவாகியிருந்தார்.
இத்தொடரின் நாயனாக இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க தெரிவாகியிருந்தார்.
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருந்தாலும் இத்தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.