July 8, 2025
தொடர்ந்து வெற்றியை பதிவு செய்யும் ராஜஸ்தான்..!
News News Line Top Updates புதிய செய்திகள்

தொடர்ந்து வெற்றியை பதிவு செய்யும் ராஜஸ்தான்..!

Mar 29, 2024

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது.

ராஜஸ்தான் அணி சார்பாக ரியான் பராக் (Riyan Parag) 84 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக பெற்றார்.

பந்து வீச்சில் அக்‌ஷர் படேல் (Axar Patel) ஹலீல் அஹ்மட் (Khalil Ahmad), குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), அன்ரிச் நோர்ட்சே (Anrich Nortje) மற்றும் முகேஸ் குமார் (Mukesh Kumar) ஆகியோர் தலா 1 விக்கட்டை டெல்லி சார்பாக வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

டெல்லி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டேவிட் வார்னர் (David Warner) 49 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

ராஜஸ்தான் அணிக்கு யுஸ்வேந்திர சஹல் (Yuzvedra Chahal), மற்றும் நன்ட்ரே பர்கர் (Nandre Burger) ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் ஆவேஸ் கான் (Avesh Khan) ஒரு விக்கட்டையும் பெற்றுக் கொடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் (Riyan Parag) தெரிவாகியிருந்தார்.

இந்த வெற்றியுடன் ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது நிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *