எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில் தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தானது இன்று புதன்கிழமை (03) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விபத்தில் 03 தொடர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் 60 வயதுடைய ஆணொருவரும், 50 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 2