November 18, 2025
தொடர் தோல்விகளுக்கு பின் வெற்றியடி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்..!
Sports புதிய செய்திகள்

தொடர் தோல்விகளுக்கு பின் வெற்றியடி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்..!

May 8, 2025

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பில் அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane) அதிகபட்சமாக 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 183 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

அணி சார்பில் டெவால்ட் பிரெவிஸ் (Dewald Brevis) அதிகபட்சமாக 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *