இவ்வாண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இதில் ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது நிலையில் உள்ளது.
மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டம் பெற்ற அணியாகவும் இவ்வாண்டில் இரண்டு முறை சாதனையை நிலைநாட்டியது.
பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இறுதி நிலையில் உள்ளது.
மேலும் பெங்களூரு அணி இறுதியாக விளையாடிய 6 போட்டிகளிலும் தொடர் தோல்வியையே சந்தித்து வருகிறது.
இந்த தொடர் தோல்விக்கு மத்தியில் ஒரு வெற்றியை பதிவு செய்யுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இப்போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் கொல்கத்தா அணியைப் பின் தள்ளி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது நிலைக்கு முன்னேறும்.
நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.
இந்த வெற்றியுடன் டெல்லி அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் ஆறாவது நிலைக்கு முன்னேறியுள்ளது.
நாளைய போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் மற்றும் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.