தொற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாத்தறை சிறைக் கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (22) குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும் 8 சிறைக்கைதிகள் அதே அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நோயைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சிறைச்சாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளா்.