ஈக்வடரின் மிகப்பெரிய நகரமான குவாயாகுவில் உள்ள தொலைக்காட்சி நிலையமொன்றை நேற்றைய தினம் (09)நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியொன்று நடைபெற்று கொண்டிருந்த வேளையில் ஆயுதமேந்திய குழுவொன்று தாக்கியுள்ளதுடன் ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர்களையும், அதில் கலந்து கொண்டவர்களையும் குறித்த குழுவினர் மிரட்டுவதும், துப்பாக்கியை காட்டி மிரட்டி பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொள்வதும் தொலைக்காட்சியில் 15 நிமிடங்கள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.
அத்துடன் ஈக்வடர் நாட்டில் உள்ள மிகப்பெரிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பியுள்ளதாகவும் இந்த விடயம் அந்த நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறையில் இருந்து குற்றவாளி தப்பியதன் பின் ஈக்வடர் நாட்டில் அவர்களின் பெயர் அறவிக்கப்பட்டுள்ளதோடு, இந்நிலையில், சில மணி நேரத்தில் நாட்டில் உள்நாட்டு ஆயுத மோதல் உருவாகி இருப்பதாகவும், ஆயுத மோதலில் ஈடுபடும் நபர்களை வெளியேற்ற நாட்டின் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் அந் நாட்டின் ஜனாதிபதி டேனியல் நோபோ(Daniel Noboa) அறிவித்துள்ளார்.