பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 60 விதம் பேர் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தென் மாகாணத்தில் உள்ள நானூறு பாடசாலை மாணவர்களை பயன்படுத்தி வைத்தியர்கள் குழுவொன்று இந்த கணக்கெடுப்பை நடத்தியதாக சமூக நிபுணர் டாக்டர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இதில் பல குழந்தைகள் இரவில் சரியாக தூங்காமல் எப்போதும் கவலையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்குழந்தைகள் கல்வியை சரியாகக் கற்பதில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசிக்கு அடிமையான குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது எனவும் வன்முறையாக நடந்து கொள்கிறார்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய எந்தவொரு குழந்தையும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு பெற்றோர்களை மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.