Tamil News Channel

தொழிலாளர் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

images (1)

ஊழியர் நலன் சார்ந்த கொடுப்பனவுகள் உள்ளிட்ட தரவுகளைப் பெறக்கூடிய டிஜிட்டல் தரவு அமைப்பைத் தயாரிக்குமாறு மத்திய வங்கியும் தொழிலாளர் திணைக்களமும் இணைந்து தொழிலாளர் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தொழிலாளர் திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் அரசாங்க கணக்குகள் குழு கூடிய போது இது பற்றி விவாதிக்கப்பட்டது.

தொழிலாளர் திணைக்களத்தில் தொழில் வழங்குனர்களை பதிவு செய்ததன் பின்னர், அது தொடர்பான வருங்கால வைப்பு நிதி கொடுப்பனவுகள் மத்திய வங்கிக்கு செலுத்தப்படுவதாகவும், மத்திய வங்கியானது ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தொழிலாளர் திணைக்களத்திற்கு கொடுப்பனவுகள் பற்றிய தரவுகளை வழங்குவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தரவுகளைப் பெறுவதற்குப் பதிலாக, தொழிலாளர் திணைக்களம் இது தொடர்பாக தொடர்ந்து புதுப்பிக்கக்கூடிய ஒரு அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மக்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.

நல நிதியை செலுத்தத் தவறிய அமைப்புகள் மீது தற்போது 15,000 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts