Tamil News Channel

தொழிலில் கொடிகட்டி பறக்கும் நடிகர் பிரசாந்த்…. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

25-67f292b17f08d

நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவலை தற்போது இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நடிகர் பிரஷாந்த்

தமிழ் திரையுலகில், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையாளராக வலம் வருகின்றார் நடிகர் பிரஷாந்த்.

கடந்த 1990ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடிய பிரசாந்த்திற்கு ஏகப்பட்ட ரசிகைகள் பட்டாளம் உள்ளது.

சாக்லேட் பாய் இமேஜுடன் வலம்வந்த நடிகர் பிரஷாந்த் ரசிகைகளின் கனவு கண்ணனாக இருந்தார். பின்பு ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்த ஜீன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.

சொத்து மதிப்பு என்ன?

நடிகர் பிரஷாந்த் திருமணமாகி ஒரு வருடத்திலேயே மனைவியை விவாகரத்து செய்தார். நீண்ட ஆண்டுகளுக்கு பின்பு கடந்த ஆண்டு மீண்டும் நடிப்பிற்கு வந்தார்.

ஹீரோவாக நடித்த ‘அந்தகண்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து அசத்தினார்.

இந்நிலையில் இன்று 53வது பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் பிரஷாந்தின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது.

சினிமாவில் சரியாக வாய்ப்பு இல்லாத நிலையிலும், தனது தொழிலில் கொடிகட்டி பறந்து வருகின்றார். இவர் கோல்டு டவர் என்கிற பெயரில் 17 மாடி கொண்ட கட்டிடத்தை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

அதில் பல முன்னணி நகைக் கடை உள்பட பல கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதன் வாடகைகள், மற்றும் தொழிலிலும் வருமானம் வருகின்றது.

சென்னையில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள பிரஷாந்த், ஷூட்டிங் ஹவுஸ் ஒன்றையும் கட்டி வாடகைக்கு விட்டுள்ள நிலையில், பல சொகுசு கார்களும் வைத்துள்ளார்.

நடிகர் பிரஷாந்திற்கு மொத்தம் ரூ.150 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts