தற்போதைய நிலையில் ஆண்களாயினும் சரி பெண்களாயினும் சரி தமது சரும அழகினை
மேலும் அழகுபடுத்த பல்வேறு அழகு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறானதொரு அழகு சாதன செயற்பாடுகளில் பெரும்பாலான பெண்கள் த்ரெட்டிங் (THREADING) முறையில் புருவ முடிகளை திருத்துகின்றனர்.
இது கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம், பொட்டு வர்மம் (சுடரொளியின் காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழிபிதுங்கி வர்மம்),மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற வர்மங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. இந்த புருவ முடிகளை திருத்துபவர்களுக்கு இந்த வர்மங்களை பற்றி தெரிய வாய்ப்பேயில்லை.
இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது. விளைவு குறைவான பிராண சக்தியால் ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்துக்கே வித்திட்டு விடுகின்றனர்.
இவை ஆயுளை குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணமாகின்றன.
வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது. மேலும், உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன.
எனவே, இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக்கொள்வது போலாகும்.
பெண்கள் நல்ல சுத்தமான விளக்கெண்ணெயை கண் புருவங்களில் தீட்டுவதானாலும், கண்ணில் இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து, நீட்டித்து, நல்ல பிராணன், நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியம் கொண்ட தேகத்தை பெற்றிடுங்கள்.