நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 ஆம் திகதி வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கத்தில் சிறப்புக் காட்சி திரையிட்டபோது, அங்கு அல்லு அர்ஜூனும் சென்றுள்ளார்.
அவரைப் பார்ப்பதற்காக ஏகப்பட்ட கூட்டம் சூழ்ந்த நிலையில், அதில் பெண்ணொருவர் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் அல்லு அர்ஜூன், அவரது பாதுகாப்புக் குழு, சம்பந்தப்பட்ட திரையரங்கம் மீது ஹைதராபாத் பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
தொடர்ந்து, குறித்த தியேட்டர் உரிமையாளர், மேலாளர், மேற்பார்வையாளர் ஆகியோரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இவ் வழக்கு தொடர்பில் நடிகர் அல்லு அர்ஜூனை தெலுங்கான பொலிஸார் கைது செய்துள்ளதாவும் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.