அடுத்த வாரம் தொடக்கம் அரசாங்கத்தினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த 24ஆம் திகதி நடந்த வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 எம்.பி.க்கள் வாக்களித்திருந்தனர்.
அத்துடன் சுமார் 62 எம்.பி.க்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலமானது 46 வாக்குகள் பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலமானது, தற்போது சட்ட வரைவுத் துறைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக சபாநாயகரின் அனுமதிக் கையொப்பம் இன்னும் இடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமையில் குறித்த சட்டமூலமானது சபாநாயகர் கையொப்பமிட்டு அதனை நடைமுறைப்படுத்த அங்கீகாரம் வழங்கவுள்ளதாகவும்