January 20, 2026
நட்சத்திர உதைபந்து வீரர் ஓய்வு!
புதிய செய்திகள்

நட்சத்திர உதைபந்து வீரர் ஓய்வு!

Sep 5, 2024

நட்சத்திர உதைபந்து வீரர்களில் ஒருவரான உருகுவேவைச் சேர்ந்த 37 வயதான லூயிஸ் சுவாரஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீருடன் அறிவித்துள்ளார்.

இதன்மூலம், 17 ஆண்டுகள் நீடித்த அவரது மாபெரும் சர்வதேச விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

அவர் உருகுவே அணி சார்பில் விளையாடும் கடைசி போட்டியாக, நாளை (06) பாரகுவேயுடன் நடைபெறவுள்ள பீபா உலகக்கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுவாரஸ், 142 சர்வதேச போட்டிகளில் விளையாடி 69 கோல்கள் அடித்து, உருகுவே நாட்டின் எல்லாத் காலங்களிலும் சிறந்த கோல் வேட்டைக்காரராக திகழ்ந்தார்.

2007-ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் தனது முதலாவதாக கலந்துகொண்டார்.

தற்போது, சுவாரஸ் தனது விளையாட்டு வாழ்க்கையை இன்டர் மயாமி சிஎஃப்பில் தொடர்ந்து கிளப் அளவிலான விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *