யாழ். தெல்லிப்பளை பகுதியில் போதை பாவனையில் இருந்து மீண்ட இளைஞனுக்கு அவரது நண்பர் மீண்டும் போதைப்பொருள் கொடுத்த நிலையில், குறித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கடந்த 06 மாத காலமாகவே குறித்த இளைஞன்  போதைப் பொருள் பாவனையில் இருந்து மீண்டு, வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம்(18)  நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்ற போதே இளைஞனின் நண்பர்   போதை பொருளை  கொடுத்துள்ளார்.

இதனையடுத்து  மீண்டும் போதைப்பொருளை பாவித்தமையால், அதீத போதை காரணமாக இளைஞனின் உடல் நிலை மோசமாகியுள்ளது.

தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும்  நெஞ்சு வலிப்பதாகவும்  இளைஞன் தாயாருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

தாயார் இளைஞன் கூறிய இடத்திற்கு சென்று, மயங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த மற்றைய இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை பொலிஸார், போதைப்பொருளை கொடுத்த  இளைஞனை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து வைத்திய அறிக்கையில் குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து  பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here