Tamil News Channel

நமீபியா அணியை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

ICC U19

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் 2 போட்டிகள நடைபெற்றிருந்தன.

இதில் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியிருந்தது.

மற்றைய போட்டியில் அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது.

அயர்லாந்து அணி சார்பாக கியான் ஹில்டன் 90 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் மரூஃப் மிர்தா மற்றும் பர்வேஷ் ரஹ்மான் ஜிபோன் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் பங்களாதேஷ் அணி சார்பாக வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 46.5 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மொஹமெட் சிஹாப் ஜமேஸ் 55 ஓட்டங்களையும், அஹ்ரார் அமின் 45 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாகப் பெற்றனர்.

பந்து வீச்சில் ஸ்கொட் மக்பெத் 2 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக மொஹமெட் சிஹாப் ஜமேஸ் தெரிவாகியிருந்தார்.

இந்த வெற்றியுடன் பங்களாதேஷ் அணி 2 புள்ளிகளுடன் A குழுவின் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது நிலையில் உள்ளது.

தற்போது நடைபெறுவரும் போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts