
“நம்பிக்கையின் நடுவே நாசம்!” – சிரியாவை அதிர வைத்த ஜெபத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல்!
சிரியா, டமாஸ்கஸ் நகரின் புறநகரான டுவெய்லா பகுதியில் மார்இலியாஸ் கிரேக்கம் உர்தோடாக்ஸ் தேவாலயம் அமைந்துள்ளது.
நேற்றைய தினம் போதனை நேரத்தில் அங்கு நடைபெற்ற பயங்கர தற்கொலை தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெளியிட்ட செய்திக்கணக்கின் படி, தாக்குதல் நடந்த போதனை நேரத்தில் தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஜெபித்துக் கொண்டிருந்தனர்.
அந்நேரத்தில், ஒருவரால் துப்பாக்கிச் சூட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அவரால் அணிந்திருந்த வெடிகுண்டு பெல்ட் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.
“மக்கள் கடவுளின் கண் முன்னிலையில் அமைதியாக ஜெபித்துக் கொண்டிருந்தனர். சுமார் 350 பேர் உள்ளே இருந்தனர்,” என அந்த தேவாலயத்தின் குரு பிதா ஃபாடி கட்டாஸ் கூறியுள்ளார்.
அவர் தனது கண் முன்னே 20 பேரின் உயிரிழப்பை பார்த்ததாகவும் சோகமுடன் தெரிவித்துள்ளார்.
தேவாலயத்தின் மற்றொரு குரு மெலேட்டியுஸ் ஷஹாத்தி, இந்த தாக்குதலில் இருவர் ஈடுபட்டதாக சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.
ஒருவர் தேவாலயத்தின் கதவின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்பு மற்றொருவர் உள்ளே சென்று வெடிகுண்டு வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளன. தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய அரசு (Islamic State) அமைப்பு இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் எங்கள் வாழ்நாளில் கூரிய ஆயுதமே எடுத்து நடந்ததே இல்லை; ஜெபமொழிகளே எங்களின் ஆயுதம்,” என தாக்கத்திலிருந்து உயிர் தப்பிய இசாம் நஸ்ர் என்பவர் உருக்கமாக கூறியுள்ளார்.இந்த தாக்குதல், பல ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவில் தேவாலயத்தை இலக்காகக் கொண்ட நிகழ்வாகும்.
தற்போதைய அதிகாரம் வகிக்கும் அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான அரசின் கீழ், சிறுபான்மையினரின் ஆதரவை ஈர்க்கும் முயற்சிகள் நடந்து வரும் சூழலில் இத்தகைய தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.