Tamil News Channel

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார் – வசந்த சமரசிங்க..!

சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்கொள்ள தயார் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு காண்பது மற்றும் அவரது அறிக்கையை மீளாய்வு செய்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல. எதிர்க்கட்சிகள் தயாரித்து வருவதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறனை அரசாங்கம் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *