இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெற்ற வெற்றியின் ஊடாக புதிய வெற்றிகளை கண்டறிவதற்கு இந்தியாவுக்கு இயலும் என நம்புவதாக இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆசிய நாடுகளுடன் கொண்டிருக்க கூடிய நட்புறவு, ஒற்றுமை இலங்கைக்கும் இருக்க கூடிய செயல் திறன் மிக்க ஒத்துழைப்பு, இந்த சந்தர்ப்பத்திலே மிக கௌரவமாக நினைவு கூறப்படுகிறது.
பிரதம அமைச்சர் பெற்ற வெற்றியின் ஊடாக புதிய வெற்றிகளை கண்டறிவதற்கு இந்தியாவுக்கு இயலும் என நம்புகின்றேன்.
சமாதானம் அபிவிருத்திகளினுடைய புதிய இலக்குகளை அடைந்து கொள்ளுவதற்கு இந்தியாவுக்கும் முழு உலகுக்கும் அதன் நன்மைகள் கிடைக்கப்பெறும் வகையிலே இதற்கான வெற்றிகளை பெறுவதற்கு முடியும் என்று நம்புகின்றேன்.
அதற்கு நான் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் ஆகவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்க கூடிய நெடுங்கால இருதரப்பு களுக்கும் இடையில் இருக்கின்ற பரஸ்பர பிணைப்புக்களையும் விருத்தி செய்வதற்கு இயலும் என்று நம்புகின்றேன்.
நரேந்திர மோடி அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற வெற்றிக்கு மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்து எல்லா ஆசீர்வாதங்களை கிடைக்க வேண்டும்.
அதற்கு பிரதம அமைச்சர் என்ற வகையிலே நான் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.