வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லயம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்சத்திருவிழா நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்கும் முருகன், வள்ளி, தெய்வானைக்கு விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது.
பின்னர் முருகப்பெருமான் எழுந்தருளியாக திருமஞ்சத்தில் வீற்று, வள்ளி, தெய்வானையுடன் உள்வீதி, வெளிவீதியூடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலயபிரதம சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.
பல இடங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டு முருகப் பெருமானிடம் இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.