வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பதினேழாவது மாலை நேரத் திருவிழாவான அருணகிரிநாதர் திருவிழா நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலய பிரதம சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.
கடந்த 09.08.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவமானது 25 நாட்கள் இடம்பெறும்.
நேற்றைய திருவிழாவில் பல இடங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு முருகப் பெருமானின் இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








