Tamil News Channel

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்..!

நவம்பர் மாதத்தில் பிறந்த நபர்களின் குணாதிசியங்கள், ஆளுமை திறன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒருவரது பிறந்த மாதம், தேதி இவற்றினை வைத்து அவர்களின் குணத்தை நாம் தெரிந்து கொள்கின்றோம். ஜோதிடத்தின் படி, ஒருவர் பிறந்த தேதி மற்றும் மாதம், அந்நபரின் குணாதியங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதனால் தான் வெவ்வேறு மாதத்தில் பிறந்தவரின் குணாதிசயங்கள் வேறுபட்டும், ஒரே மாதத்தில் பிறந்தவர்களின் குணாதியங்கள் ஒரே மாதிரியாகவும் காணப்படும்.

அந்த வகையில் நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயத்தை நாம் தெரிந்து கொள்வோம்.

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எந்தவொரு காரியத்தையும் வித்தியாசமாக சிந்தித்து, எளிதில் செய்யக்கூடியவர்களாகவும், புதுமை மற்றும் படைப்பாற்றலில் வல்லவர்களாகவும் இருப்பார்கள்.

மிகவும் அழகாக இருக்கும் இவர்களின் தோற்றம், மற்றவர்களை எளிதில் ஈர்ப்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களைக் கண்டு பொறாமை படும் அளவிற்கு பிரபலமாகவும் இருப்பார்களாம்.

இயற்கையாகவே கடின உழைப்பாளியாக இருக்கும் இவர்கள் கொடுக்கும் வேலையை திறம்பட செய்து முடிப்பதுடன், வெற்றி பெற குறுக்குவழிகளை எந்த காலத்தில் பயன்படுத்த மாட்டார்கள். நேர்வழியில் கிடைக்கும் வெற்றியே உண்மையான வெற்றி என்று நம்புவார்கள்.

மிகவும் விசுவாசமானவர்களாக இருக்கும் இவர்கள், நட்பு, உறவு இவற்றினை கைகொள்வதில் சிறந்தவர்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களை நீங்கள் காதலித்து வந்தால், கவலை பட வேண்டிய அவசியமே இல்லையாம். ஏனெனில் யாரையும் ஏமாற்றாமல் இருப்பதுடன், உண்மையாகவும் இருப்பார்கள்.

எப்பொழுதும் அடக்கமாகவும், இனிமையாகவும் இருக்கும் இவர்களை, மற்றவர்கள் கோபப்படுத்திவிட்டால் இவர்களை கட்டுப்படுத்தவே முடியாதாம். இவர்களை பகைப்பவர்கள் மோசமான விளைவினை சந்திக்கவும் செய்வார்கள். ஆகவே எக்காரணத்தைக் கொண்டும் இவர்களை கோபப்படுத்தாதீர்கள்.

தங்களை சுற்றி நடக்கும் தவறுகளை வெளிப்படையாக தட்டிக் கேட்பதுடன், யாரையும் சார்ந்து வாழாதவராகவும், மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவார்கள். மற்றவர்களிடம் இதையே எதிர்பார்க்கவும் செய்வார்கள்.

மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருந்தாலும், எளிதில் மற்றவர்களிடம் பழகக்கூடியவர்கள். உணர்வுகளை கட்டுப்படுத்தாத முடியாத இவர்களை, சுயநலவாதி என்று தவறாகவும் நினைக்கும் நிலை ஏற்படும். ஆனால் உண்மையிலேயே மிகவும் மென்மையாகவும், கண்ணியமாகவும் பேசுவார்கள்.

மற்றவர்களுடன் நன்கு பழகினாலும், உடனே அவர்களை நம்ப மாட்டார்கள். ரகசியங்களையும் அவ்வளவு எளிதில் பகிர்ந்து கொள்ளவும் மாட்டார்கள். இவர்களின் இந்த குணம் தந்திரமான மற்றும் நச்சுத்தன்மையுடன் மக்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள முடிகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts