December 14, 2025
நாகபட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பம்..!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

நாகபட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பம்..!

Aug 17, 2024

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்று  முதல் ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில் இந்தியாவின் – நாகபட்டினத்தில் இருந்து நண்பகல் 12 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த பயணிகள் கப்பல் நேற்று 5 மணியளவில் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.

கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன் துறையை வந்தடைந்தது.

இந்நிலையில் நேற்று மீண்டும் பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *