நாக்கின் நிறத்தைக் கொண்டு நீரிழிவு, பக்கவாதம் போன்ற நோய்களை கணினி மூலமாக 98 சதவீதம் துல்லியமாக கணிக்க முடியும் என அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவிலுள்ள மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழம், தெற்கு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து, இமேஜிங் சிஸ்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இதிலுள்ள கெமராக்கள் மூலமாக சுமார் 20 cm தூரத்திலிருக்கும் நோயாளியின் நாக்கை படம்பிடித்து, அதன் வடிவம், தடிமன், நிறம் ஆகியவற்றை பகுத்தறிந்து, ஆஸ்துமா, நீரிழிவு, பக்கவாதம், பித்தப்பை பிரச்சினை, கல்லீரல், கொவிட் உள்ளிட்ட நோய்களை எளிதாக கண்டறியலாம்.
சீன மருத்துவத்தில் சுமார் 2000 வருடங்கள் பழைமையான முறை இதுவாகும்.
அதன் பின்புலத்திலேயே இந்த ஏஐ கணினி பகுப்பாய்வு முறை உருவாக்கப்பட்டுள்ளது.