Tamil News Channel

நாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இலங்கையர்..!

nasa-copy

அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில் இலங்கையர் ஒருவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஹஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில், அமைக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரகத்திற்கான உருவகத்துக்குள் செல்வதற்கே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த உருவகத்துக்குள் வாழ்தல் மற்றும் பணிகளில் பங்கேற்பதற்கு ஒரு இலங்கையர் உட்பட நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட புதிய குழுவை நாசா தேர்ந்தெடுத்துள்ளது.

இதன்படி ஜேசன் லீ, ஸ்டெபானி நவரோ, ஷரீஃப் அல் ரொமைதி மற்றும் இலங்கையரான பியூமி விஜேசேகர ஆகியோர் மே 10 ஆம் திகதியன்று, நாசாவின் மனித ஆய்வு ஆராய்ச்சி அமைப்பில் நுழைவார்கள்.

இக்குழுவினர் உள்ளே நுழைந்தவுடன் 45 நாட்கள் விண்வெளி வீரர்களைப் போல வாழ்ந்து பணிகளில் ஈடுபட்ட பின்னர் ஜூன் 24 அன்று பூமிக்கு திரும்பி குறித்த உருவகத்தை விட்டு வெளியேறுவார்கள்.

நாசா விண்வெளி வீரர்களை சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஆழமான விண்வெளி பயணங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர், அவர்களை எவ்வாறு தனிமைப்படுத்தல், அடைப்பு மற்றும் தொலைதூர நிலைமைகளுக்கு மாற்றியமைத்துக்கொள்வது என்பதை ஆய்வு செய்ய இது உதவுகிறது.

இந்த ஆண்டு உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் கிரகப் பயணத்தில் பங்கேற்ற தன்னார்வலர்களின் இரண்டாவது குழு இந்தக் குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த ஆய்வில் பங்கேற்கும் இலங்கையரான பியூமி விஜேசேகர கலிபோர்னியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள நாசா அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள கதிர்வீச்சு உயிரியல் இயற்பியல் ஆய்வகத்தில் முதுகலை ஆராய்ச்சி விஞ்ஞானி ஆவார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *