தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி ஆணையர்கள், துணைத் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் இன்று (28.09) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் உறுப்பினர் எம்.ஏ.பீ.சீ. பெரேரா தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பான அடிப்படை விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பெரேரா தெரிவித்தார்.
அன்றைய தினம் அனைத்து உறுப்பினர்களும் கூடி நாடாளுமன்ற தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளுக்காக செலவிடப்பட்ட பணம் தொடர்பில் இதுவரை எவ்வித மதிப்பீடும் செய்யப்படவில்லை என அரசாங்க அச்சகத்தின் பிரதானி கங்கானி லியனகே தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இது தொடர்பான விடயங்கள் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.