நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்களான குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோருக்கு இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (03.06.2024) நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போது, தனது தந்தையை மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கியதாக குணதிலக்க ராஜபக்ஷவின் மகன் கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குணதிலக்க ராஜபக்ஷவிடம் நேற்று (05.06.2024) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், இந்த மோதல் சம்பவத்தை நேரில் பார்த்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலங்களைப் பெறுவது அவசியம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளமை குறித்து நாடாளுமன்றத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.