நாடாளுமன்றத்தின் விசேட கூட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் 16 ஆம் இலக்க கட்டளைக்கமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.