சபாநாயகர் எழுத்துமூல கோரிக்கை விடுத்து தன்னை பொலிஸ் காவலில் வைக்குமாறு கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அங்கு அர்ச்சுனா எம்.பி., சபாநாயகரை கடுமையாக சாடினார்.
அப்போது எழுந்து நின்ற நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாட்டில் ஜாதிப் பிரிவினை இல்லை என்றும், இவ்வாறான நேரத்தில் ஆங்கிலத்தில் பேசி தவறான கருத்தைப் பரப்புவது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு மனப் பிரச்சினை என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, பொலிஸ் போக்குவரத்து சட்டத்தின் கீழ் அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பொலிஸாரால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
இந்த நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதால் சட்டத்தை மதிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனவிடம் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே எம்.பி அர்ச்சுனா சபாநாயகரிடம் மன்னிப்பு கேட்டார்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சிறப்புரிமைக் கேள்விகளைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் பேச முயற்சிக்கின்றார் என அவைத்தலைவர் தெரிவித்தார்.