நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை பார்வையிட்டார்..!

0
7

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் இன்று (13)  முன்னெடுக்கப்பட்டு வருகிறது

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ  குழுவினர், தடயவியல் பொலிஸார், உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வாய்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வருகைதந்து அகழ்வுப் பணிகளை  பார்வையிட்டார்

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டுகட்ட அகழ்வாய்வுகளின்போது 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தகப்பட்டுள்ளதுடன்,  மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது இதுவரை 5 எலும்புகூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன மொத்தம் 45 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமையும் இன்றும் சில மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டு வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here