நாடு முழுவதும் முடங்கிய ஜியோ சேவை: காரணம் என்ன?
இந்தியாவில் ஜியோ சேவை நாடு முழுவதும் முடங்கியதால் பயனர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவை இந்தியாவில் முன்னணி தொடர்பு நிறுவனமாக உள்ளது.
நேற்றைய தினம் திடீரென ஜியோவின் சேவை முடங்கியதால், பல்வேறு பகுதிகளில் பயனர்கள் இணையத்தை பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.

சென்னை, கவுகாத்தி, ஐதராபாத், புனே, பெங்களூரு, மும்பை, சூரத், கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஜியோ சேவை முடங்கியதாக பயனர்கள் புகார் கூறினர்.
சமூக வலைத்தளத்தில் 38 சதவீதம் பேர் தங்கள் ஜியோ ஃபைபர் சேவையில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், 7 சதவீதம் பேர் Mobile Network சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.
Network தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியதாக கூறப்படுகிறது. ஜியோ இப்பிரச்சனை குறித்து ஆய்வு செய்து சரி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எப்படி இந்த பிரச்சனை ஏற்பட்டது என்று குறிப்பிடவில்லை.

![]()