நாட்டில் நாளை (01) முதல் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை எதிர்பார்க்கப்படுகிறது.
ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.








