February 9, 2026
நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

Jun 23, 2024

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (23.06) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

சில பகுதிகளில்  75 மில்லிமீற்றர் வரையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும்  வட மாகாணத்திலும் மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும்  எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்றானது மணிக்கு  40-50 வரை  வீசக்கூடும் எனவும்  வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *