இதுவரை நாடளாவிய ரீதியில் இவ் வருடம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இம்மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 80,222 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாகாண ரீதியில் அதிகளவாக 37,216 டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
அதன் படி டிசம்பர் மாதத்தில் மட்டும் 3,734 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து அதனை அகற்றுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.